ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரத்தில், சம்பவம் நடைபெற்றதாக கூறப்படும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டில் உள்ள சிசிடிவி டிஜிட்டல் வீடியோ பதிவுகளை போலீஸார் கைப்பற்றினர்.
அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டின் வரவேற்பு அறையில் வைத்து தன்னை முதல்வரின் உதவியாளர் பிபவ் குமார் தாக்கியதாக ஆம் ஆத்மி எம்.பி. ஸ்வாதி மாலிவால் போலீஸில் புகார் அளித்தார்.
இதன்பேரில், பிபவ் குமாரை போலீஸார் கைது செய்த நிலையில், முதல்வரின் வீட்டில் உள்ள சிசிடிவி டிஜிட்டல் வீடியோ பதிவுகளை போலீஸார் கைப்பற்றி, பரிசோதனைக்கு உட்படுத்த முடிவு செய்திருக்கின்றனர்.