பாகிஸ்தானில், பள்ளித் தேர்வில் நடைபெற்ற முறைகேடுகளை வெளிக்கொண்டு வந்த பெண் பத்திரிகையாளர் சரமாரியாக தாக்கப்பட்டார்.
கராச்சி மாவட்டம் கோரங்கி பகுதியில் மெட்ரிகுலேஷன் பள்ளிக்குத் தேர்வு நடைபெற்றது. இதில் ஆள்மாறாட்டம் உள்ளிட்ட முறைகேடுகள் அரங்கேறின.
இதை பெண் பத்திரிகையாளர் ஒருவர் படம் பிடித்ததாக தெரிகிறது. இதனால் ஆவேசம் அடைந்த பள்ளி நிர்வாகத்தினர், அந்தப் பத்திரிகையாளரை சரமாரியாக தாக்கினர். இதில் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.