ராணுவத்தைக் கேள்வி எழுப்புபவர்கள் தேச துரோகிகள் என்றும், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
அற்பத்தனமான விளம்பரத்துக்காக ராணுவத்தை வைத்து சிலர் அரசியல் செய்வதாக விமர்சித்தார்.
தாங்கள் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக பிற நாடுகளுடன் கைகோர்த்து ராணுவத்தை வைத்து அரசியல் செய்வதாக காங்கிரசை மறைமுகமாக ஜெய்சங்கர் சாடினார். மேலும், வலிமை வாய்ந்த நாடாக இந்தியா மாறுவதை வளர்ந்த நாடுகள் விரும்பவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.