ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் பன்னா என்ற பழங்குடியின மக்கள் 10 அடி உயர குச்சியை காலில் கட்டி நடப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
காடுகளிலும் மலைகளிலும் வசிக்கும் இந்தப் பழங்குடியின மக்கள், நச்சுப் பாம்புகளிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக இந்த நடைமுறையைக் கடைப்பிடிக்கின்றனர். 10 அடி உயர குச்சியை கால்களில் கட்டி, மலை முகடுகளை எளிதாக கடக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.