இலங்கையில் பள்ளிப் பாடத் திட்டத்தில் ராமாயணத்தையும் அதன் போதனைகளையும் சேர்க்க வேண்டுமென யோகா குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கை நுவரெலியாவில் நடைபெற்ற சீதா தேவி கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற அவர், ராமர் தேடி வரப் போவதாக, சீதையை சந்தித்து ஹனுமன் இங்குதான் நம்பிக்கை ஊட்டியதாக தெரிவித்தார்.
மேலும் பெண்களை வலிமையானவர்கள் என்று கூறிய ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், இந்தக் கோயில் உலக அளவில் பெண்களுக்கு நம்பிக்கை அளிக்கும் ஸ்தலமாக விளங்கும் என்றும் குறிப்பிட்டார்.