திருவள்ளூர் மாவட்டம் புது கும்முடிபூண்டி கரும்பு குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீதேவி பூதேவி ஸ்ரீசீனிவாச பெருமாள் கோயிலில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதில் ஸ்ரீமன் சதீசன் ராமானுஜ தாசன் பட்டாச்சாரியார் தலைமையில் யாக கலச பூஜைகள் மற்றும் புனித நீர் கொண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கபட்டது.