விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் காட்டாற்று வெள்ளம் காரணமாக செண்பகத்தோப்பு மற்றும் ராக்காச்சி அம்மன் கோயிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், சிறு சிறு அருவிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதனால், சதுரகிரி கோயில், ராக்காச்சி அம்மன் கோயில் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
இந்நிலையில், தடை செய்யப்பட்ட பகுதிகளில் யாரேனும் நுழைந்து உள்ளார்களா? என வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.