கொல்கத்தா அணி துணைப் பயிற்சியாளர் அபிஷேக் நாயருடன், தனிப்பட்ட முறையில் பேசியதை ஒளிபரப்பிய ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளரை ரோஹித் சர்மா கண்டித்துள்ளார்.
அபிஷேக் நாயருடன் தனிப்பட்ட முறையில் பேசியதை எதிர்ப்பு தெரிவித்தும், வீடியோவாக பதிவு செய்ததுடன், அந்த வீடியோவை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டுள்ளது.
இதனால் அதிருப்தியடைந்த ரோஹித் சர்மா தனது எக்ஸ் தளப் பதிவில், கிரிக்கெட் வீரர்களின் ஒவ்வொரு செயலையும், குறிப்பாக நண்பர்கள், சக வீரர்களுடன் தனிப்பட்ட முறையில் பேசுவதையும் ஊடுருவி படம் பிடிக்கின்றனர் என்று குற்றச்சாட்டியுள்ளார்.
மேலும், அபிஷேக் நாயர் உடனான தனது உரையாடலை பதிவு செய்ய வேண்டாமென கேட்டுக்கொண்ட போதிலும், தனது தனியுரிமையை மீறிய ஒளிப்பதிவாளர் மீது ரோஹித் சர்மா அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இதனால் ரசிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் இடையிலான நம்பகத்தன்மை பாதிக்கும் என்றும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.