திருச்சியில் மாநில அளவில் நடைபெற்ற செஸ் போட்டியில், வெற்றி பெற்ற வீரர் – வீராங்கனைகளுக்கு பரிசும், பதக்கமும் வழங்கப்பட்டன.
மாநில அளவிலான ஒருநாள் செஸ் போட்டி, புத்தூர் நான்கு வழிச்சாலை அருகில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது.
போட்டியில் சென்னை, திருநெல்வேலி மற்றும் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 321 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
இதில், 9, 11 மற்றும் 15 வயதிற்குட்ட ஆண்கள், பெண்கள் என இரு பாலருக்கும் தனித்தனியே போட்டிகள் நடைபெற்றன.