“பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் விரைவில் இந்தியா வசம் வரும்” என்றும், “இதை, புண்ணிய பூமியான பிரயாக்ராஜில் இருந்து அறிவிக்கிறேன்” என்றும் பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா சூளூரைத்துள்ளார்.
உத்தர பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜில் பாஜக சார்பில் பிரமாண்ட தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமித் ஷா, “ஜம்மு – காஷ்மீரில் 70 ஆண்டுகளாக 370 சட்டப் பிரிவை காங்கிரசார் அப்படியே வைத்திருந்தனர்” என்றும், “370 -ஐ நீக்கினால், இரத்த ஆறு ஓடும்” என்று ராகுல் காந்தி கூறினார்.
ஆனால், “370 -ஆவது சட்டப்பிரிவை தைரியமாக நீக்கியவர் பிரதமர் மோடி மட்டுமே” என்று தெரிவித்தவர், “அங்கே இரத்த ஆறு ஓடவில்லை, மாறாக அமைதி நிலவுகிறது” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “ராமர் கோவில் விழாவை, காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி தலைவர்கள், வாக்கு வங்கிக்காக திட்டமிட்டே புறக்கணித்தனர் என குற்றம் சாட்டிய அவர், “நாங்கள் யாருக்கம் பயப்படாமல் ராமர் கோவில் சென்றோம்” என்றார்.