5-ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவை ஒட்டி, திரைப்பிரபலங்கள் ஆர்வத்துடன் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றினர்.
5-ம் கட்ட மக்களவை தேர்தலை ஒட்டி, மகாராஷ்டிராவில் உள்ள 13 தொகுதிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
வாக்குப்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே நடிகர் அக்ஷய் குமார் மும்பையிலுள்ள வாக்குச்சாவடியில் தமது வாக்கினை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், நாடு வலிமையாக இருக்க வேண்டும் என்பதை மனதில் வைத்து தான் வாக்களித்ததாகவும், வாக்குப்பதிவு வீதம் அதிகரிக்கும் என நம்புவதாகவும் தெரிவித்தார்.
மும்பையின் பாந்த்ரா பகுதியிலுள்ள மவுண்ட் மேரி கான்வெண்ட் வாக்குச்சாவடியில், நடிகர் ஃபர்ஹான் அக்தர், இயக்குனர் ஜோயா அக்தர் ஆகியோர் வாக்களித்தனர்.