ஒடிசா மாநிலம் புரி மக்களவை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் சம்பித் பத்ராவை ஆதரித்து பிரதமர் மோடி பிரம்மாண்ட வாகனப்பேரணி மேற்கொண்டார்.
நாடு முழுவதும் 5-ம் கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது.
இதனைத் தொடர்ந்து, 6-ம் கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு, 8 மாநிலங்களில் உள்ள 58 தொகுதிகளுக்கு வரும் 25-ம் தேதி நடைபெறவுள்ளது.
இதில், ஒடிசாவின் புரி உட்பட 6 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு, புரி தொகுதியில் பாஜக வேட்பாளர் சம்பித் பத்ராவை ஆதரித்து பிரதமர் மோடி பிரம்மாண்ட வாகனப்பேரணி மேற்கொண்டார்.
சாலையில் இரு புறமும் ஏராளமான மக்கள் திரண்டிருந்து பிரதமர் மோடிக்கு வரவேற்பளித்தனர்.