மதுரையில் வெளுத்து வாங்கிய மழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
மாநகர் பகுதிகளான மாட்டுத்தாவணி, அண்ணாநகர், தெப்பக்குளம், உள்ளிட்ட இடங்களில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக கன மழை பெய்தது.
இதனால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதுடன், கோரிப்பாளையம் அரசு மருத்துவமனை செல்லும் சாலையிலும் மழைநீர் சூழ்ந்ததால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் என அனைவரும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.