நீலகிரி முதுமலை புலிகள் காப்பகத்தில் மானை வேட்டையாடி தூக்கிச் செல்லும் சிறுத்தையின் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
தற்போது மழை பெய்து வருவதால், முதுமலை வனப்பகுதியில் மீண்டும் பசுமை திரும்பி வருகிறது.
இதனால், சாலை ஓரங்களில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சிறுத்தை ஒன்று மானை வேட்டையாடி வனப்பகுதிக்குள் தூக்கிச் சென்றது.
இதனை அவ்வழியாக சென்ற சுற்றுலா பயணிகள் செல்போனில் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர்,