கடந்த 2 மாதங்களில் மட்டும் கொள்முதல் மற்றும் செலவினுடைய அளவு மூன்றில் இருந்து 8 மடங்கு வரை உயர்ந்துள்ளதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.
மின்சாரம் வாரியம் வெளியிட்டுள்ள தகவலில்,
கோடைகால தேவையை பூர்த்தி செய்வதற்காக மார்ச் முதல் மே வரை 2 கோடியே 75 லட்சம் ரூபாய் செலவில் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் மாநிலங்களிலேயே தமிழகத்தில்தான் அதிக மின் தேவை உள்ளது என்றும், மே 2ம் தேதி வரை தமிழகத்தில் 20 ஆயிரத்து 830 மெகாவாட் மின் பயன்பாடு இதுவரை இல்லாத அளவிற்கு பதிவாகியுள்ளதாகவும் கூறியுள்ளது.
மின்சார வாரியம் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் 316 கோடி ரூபாய் செலவில் மின்சாரம் பெறுவதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், மார்ச் 24 முதல் மே 24 வரை மின் அளவு மற்றும் கொள்முதல் செலவு 3 மடங்கு மற்றும் 8 மடங்கு அதிகரித்து உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மின் கொள்முதல் செலவு மின் நுகர்வோர் மீதான சுமையை அதிகரிக்கும் எனக் கூறியுள்ள தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், நிலுவையில் உள்ள திட்டங்களை சரியான நேரத்தில் முடித்து அதிக செலவில் மின்சாரம் கொள்முதல் செய்வதை குறைக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.