மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள வாக்குச்சாவடியில் பாலிவுட் நடிகர் பரேஷ் ராவல் வாக்களித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அனைவரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
தேர்தலில் வாக்களிக்காதவர்களுக்கு அதிக வரி விதிப்பு மற்றும் சிறு தண்டனை உள்ளிட்ட கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும் என தெரிவித்தார்.
சட்டங்கள் கடுமையாக இருந்தால் மட்டுமே வாக்குப்பதிவு சதவீதத்தை உயர்த்த முடியும் என்றும் பரேஷ் ராவல் கூறினார்.