மகாராஷ்டிர மாநிலம் தானோவில் உள்ள வாக்குச்சாவடியில் அம்மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து முக்கிய முடிவுகளையும் பிரதமர் நரேந்திர மோடி எடுத்துள்ளதாக தெரிவித்தார்.
எனவே மகாராஷ்டிர மக்கள் மகாயுத்திக்கு வாக்களிக்கப்பார்கள் என நம்புவதாகவும் அவர் கூறினார்.