5-கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 23. 66 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
18-வது மக்களவைத் தேர்தல் 7 கட்டமாக நடைபெறும் நிலையில், இதுவரை 4 கட்டமாக நடந்த தேர்தலில் 379 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது.
இதையடுத்து 5-ம் கட்டமாக 6 மாநிலங்கள்,2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
உத்தர பிரதேசத்தில் 14 தொகுதிகளிலும், மகாராஷ்டிராவில் 13 தொகுதிகளிலும், மேற்கு வங்கத்தில் 7 தொகுதிகளிலும், பீகார் மற்றும் ஒடிசாவில் தலா 5 தொகுதிகளிலும், ஜார்க்கண்டில் 3 தொகுதிகளிலும், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கில் தலா ஒரு தொகுதிக்கும் என மொத்தம் 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 23 புள்ளி ஆறு ஆறு சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் 32 புள்ளி ஏழு சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.