சென்னையில் பண்டிதர் அயோத்திதாசரின் பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து தமிழக அரசு சார்பாக மரியாதை செலுத்தப்பட்டது.
கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் தமிழ் தேசியத் தந்தை அயோத்திதாசப் பண்டிதரின் 179 ஆவது பிறந்தநாள் விழா நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்ப்புத்துறை இயக்குநர் வைத்திநாதன் மற்றும் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் அயோத்திதாசரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தும், திருவுருவ படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.