கன்னியாகுமரியில் கராத்தே கட்டாக்குகளை சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக இடைவிடாமல் செய்து கராத்தே மாணவர்கள் உலக சாதனை படைத்தனர்.
நித்திரவிளை பகுதியில் செயல்பட்டு வரும் கராத்தே மையத்தில் கோடைக் கால பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
இதில் பயின்று வரும் 7 முதல் 42 வயதிலான மாணவர்கள் கராத்தே கட்டாவையும் பல்வேறு சாகசங்களையும் ஒன்றே கால் மணி நேரம் இடைவிடாமல் செய்து ஜாக்கி புக் ஆஃப் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர்.