காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி கோயிலில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடியேற்ற விழாவை முன்னிட்டு கோவில் கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டது.
விழாவில் வரதராஜ பெருமாள், கொண்டை அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.