மயிலாடுதுறையில் அரசுப் பேருந்து மோதி மூதாட்டி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தாகூர் வீதியை சேர்ந்த ஜலகாம்பாள், பொறையார் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக அரசுப் பேருந்து ஒன்று மூதாட்டியின் மீது மோதியது. இதில் சம்பவ இடத்தில் ஜலகாம்பாள் உயிரிழந்தார்.