நீலகிரியில் இருசக்கர வாகனத்தை ஆக்ரோஷமாக இடித்து தள்ளும் ஒற்றை காட்டுயானையின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பந்தலூரை சுற்றியுள்ள பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்தது.
இந்நிலையில் கொளப்பள்ளி பகுதியில் நடமாடிக் கொண்டிருந்த யானை ஒன்று, கடை முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை முட்டித் தள்ளிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.