தேனி மாவட்டம், பெரியகுளத்தில் தேசிய அளவிலான கூடைப்பந்து லீக் ஆட்டத்தில் இந்தியன் வங்கி, வருமான வரித்துறை அணிகள் வெற்றி பெற்றன.
பெரியகுளத்தில் சில்வர் ஜூப்ளி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக 63 ஆம் ஆண்டு, தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி நடைபெற்று வருகிறது.
இப்போட்டியின் லீக் முதல் சுற்றில் 96 க்கு 68 புள்ளி என்ற கணக்கில் இந்தியன் வங்கி அணி வெற்றி பெற்றது.
இதைத்தொடர்ந்து கேரள மாநில மின்வாரிய அணியை எதிர் கொண்ட சென்னை வருமான வரித்துறை அணி 68க்கு 62 என்ற புள்ளி அடிப்படையில் வெற்றி பெற்றது.