தைவானின் புதிய அதிபராக வில்லியம் லாய் பதவியேற்கும் நிகழ்ச்சி தைபே நகரில் நடத்தப்பட்டது.
தைவானில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் வில்லியம் லாய் போட்டியிட்டார், இதையடுத்து அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதையடுத்து, மத்திய தைபேயில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் அவர் பதவியேற்றார்.
அப்போது பேசிய அவர் ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தில் தைவான் விட்டுக்கொடுக்கும் செயலை செய்யாது என தெரிவித்தார்.