சிவகங்கையில் தேநீர் கடை ஊழியரை வெட்டிக்கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சிவகங்கையை சேர்ந்த நிதிஷ் என்பவர் சென்னையிலுள்ள தேநீர் கடையில் வேலை செய்து வருகிறார்.
இவர் சொந்த ஊருக்கு சென்றிருந்த நிலையில், வீட்டினருகே உள்ள ஒரு கடையில் நின்றுக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் நிதிஷை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடினர்.