கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி அருகே உலக்கை அருவியில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட முன்னாள் அரசு ஊழியர் சடலமாக மீட்கப்பட்டார்.
சென்னையை சேர்ந்த 4 பேர் உலக்கை அருவிக்கு குளிப்பதற்காக சென்ற நிலையில் திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
இந்த வெள்ளத்தில் 4 பேரும் அடித்து செல்லப்பட்ட நிலையில் 3 பேரை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
ரியாஸ்கான் என்ற முன்னாள் அரசு ஊழியர் மட்டும் மாயமான நிலையில் அவரை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். இந்நிலையில் ரியாஸ்கான் நித்தம்பாஞ்சி பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார்.