கடல் மட்டத்தில் இருந்து சுமார் 10 ஆயிரத்து 500 அடி உயரமுள்ள கார்கிலின் பரூவில் உள்ள வாக்குச்சாவடியில் பொதுமக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர்.
லடாக் மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் தாஷி கியால்சனும், காங்கிரஸ் சார்பில் செரிங் நம்கியாலும் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் வாக்குப்பதிவு தொடங்கியது முதலே கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் வாக்காளர்கள் வாக்களித்தனர். வாக்குச்சாவடி மையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.