மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும் என ராம ஜென்ம பூமி கோயில் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் வாக்களித்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.
அப்போது பேசியவர், வாக்களிப்பது அனைவரின் உரிமை என்றும், அதனை தவறவிடக்கூடாது என தெரிவித்தார்.
பிரதமராக மோடி இருக்க வேண்டும் என்றும், மற்ற ஆட்சியாளர்கள் செய்ய முடியாததை அவர் செய்து காட்டியுள்ளதாகவும் சத்யேந்திர தாஸ் கூறினார்.