ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி பகுதியில் மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டி நடைபெற்றது.
6 பிரிவுகளாக நடைபெற்ற இந்த போட்டியில் ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 600க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.
இதில் ஒற்றைக் கம்பு, இரட்டைக் கம்பு, அடிமுறை உள்ளிட்ட பிரிவுகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு கோப்பைகள், சான்றிதழ்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.