நெல்லையில் உள்ள அகஸ்தியர் அருவியில் சாரல் மழையையும் பொருட்படுத்தாமல் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் நெல்லை மாவட்டத்துக்கு சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள அகஸ்தியர் அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள் சாரல் மழையையும் பொருட்படுத்தாமல் அருவியில் குளித்தும் விளையாடியும் மகிழ்ந்தனர்.