நீலகிரிக்கு சுற்றுலா வந்த ஆந்திர வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் குழந்தைகள் உட்பட 10 பேர் படுகாயமடைந்தனர்.
நீலகிரியில் கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில், ஆந்திராவில் இருந்து ஒரே குடும்பத்தை சார்ந்தவர்கள் சரக்கு வாகனம் ஒன்றில் உதகைக்கு வந்துள்ளனர்.
இவர்களது வாகனம் குன்னூர்- கட்டப்பெட்டு சாலையில் சென்றுக்கொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, பின்னோக்கி வந்த வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 10 பேர் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து அங்கிருந்தவர்கள் காயமைடந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில், விபத்து குறித்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.