திருப்பத்தூரில் கள்ளச்சாராயம் காய்ச்ச தயாராக வைக்கப்பட்டிருந்த 3100 லிட்டர் சாராய ஊறல்களை மதுவிலக்கு போலீசார் பறிமுதல் செய்தனர்.
வாணியம்பாடி அருகே கடந்த இரண்டு நாட்களாக சாராய ஒழிப்பு பணியில் மதுவிலக்கு போலீசார் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது தேவராஜபுரம், கொர்ரிபள்ளம் ஆகிய பகுதிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 3100 லிட்டர் சாராய ஊறல்களை பறிமுதல் செய்த போலீசார் அவற்றை கீழே ஊற்றி அழித்தனர்.
மேலும் தப்பியோடிய கள்ளச்சாராய கும்பலை தேடி வருகின்றனர்.