வெள்ளப்பெருக்கு காரணமாக திருச்சி மாவட்டம், புளியஞ்சோலை பகுதிக்கு வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு தடைவிதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.
கொல்லிமலையில் இடைவிடாது பெய்துவரும் கனமழையால் புளியஞ்சோலை வழியாக வரும் அய்யாறு ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் புளியஞ்சோலை சுற்றுலா மையத்திற்கு சுற்றுலா பயணிகள் யாரும் வரவேண்டாம் என வனத்துறை தெரிவித்துள்ளது.