தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் 4- வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
பழைய குற்றால அருவியில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 17 வயது சிறுவன் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார்.
அதனைத் தொடர்ந்து குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளும் தற்காலிகமாக மூடப்பட்டது.
இந்நிலையில் தற்போது அருவிகளில் தண்ணீர் வரத்து வெகுவாக குறைந்த போதிலும் பாதுகாப்பு கருதி 4-வது நாளாக சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.