திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த வட மாநில இளைஞர் பலியானார்.
சென்னையிலிருந்து பெங்களூரு நோக்கி சென்ற விரைவு ரயிலில், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சோம்நாத் சோரன் என்பவர் பயணித்துள்ளார்.
இந்நிலையில் ஆம்பூர் அடுத்த கன்னிகாபுரம் அருகே சென்று கொண்டிருந்தபோது, ரயிலில் இருந்து தவறி விழுந்த சோம்நாத் சோரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார், உடலை கைப்பற்றி ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.