நீலகிரி மாவட்டம் உதகையில் பெய்து வரும் தொடர் மழையால், ரோஜா பூங்காவில் மலர்கள் அழுகியும், உதிர்ந்தும் காட்சியளிக்கிறது.
இந்த ஆண்டு 19வது ரோஜா கண்காட்சி கடந்த 10ஆம் தேதி துவங்கியது. சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்ததால், இந்த கண்காட்சி மேலும் 3 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தொடர் மழை காரணமாக, ரோஜா தோட்டத்தில் மலர்கள் உதிர்ந்து காட்சியளிப்பதால் சுற்றுலாப் பயணிகள் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.