ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உடல்நலம் குன்றி உயிருக்கு போராடும் ஆண் யானைக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பெரும்பள்ளம் அணை நீர் தேக்கம் அருகே, கடந்த பத்து நாட்களாக 30 வயது மதிக்கத்தக்க ஆண் யானை உடல்நலம் குன்றிய நிலையில் சுற்றித் திரிந்து வந்தது.
இந்நிலையில் அந்த யானை தற்போது படுத்த படுக்கையான நிலையில், 15-க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் கால்நடை மருத்துவர் உதவியுடன் குளுக்கோஸ் உள்ளிட்டவற்றை கொடுத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.