தென் ஆப்பிரிக்கா முன்னாள் அதிபர் ஜேக்கப் சூமா பொதுத் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற அவதூறு வழக்கில் அவருக்கு அண்மையில் 15 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
தென் ஆப்பிரிக்கா அரசியலமைப்புச் சட்டப்படி, 12 மாதங்களுக்கு மேல் சிறை தண்டனை விதிக்கப்பட்டால், ஒருவர் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற வகையில், மே 29-இல் நடைபெறும் பொதுத் தேர்தலில் முன்னாள் அதிபர் ஜேக்கப் சூமா போட்டியிடுவதில் தடை நிலவுகிறது.