குமரியில் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் ஆற்றில் குளிக்க நகராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது.
குமரியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து, பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
மேலும் குளித்துறை தரைப் பாலம் முழுவதும் நீரில் மூழ்கியதால் இருசக்கர வாகனம் மற்றும் மக்கள் நடந்து செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாலத்தின் இரண்டு பகுதிகளிலும் தடுப்பு வேலிகள் அமைத்து அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.