நெல்லையில் 13 வயது சிறுவனை மந்திக் குரங்கு தாக்கிய நிலையில் காயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சிவந்திபுரம் கிராமத்தை சேர்ந்த முத்துராம் என்ற சிறுவன் சிறுநீர் கழிக்க வீட்டுக்கு வெளியே சென்றபோது மந்திக் குரங்கு ஒன்று சிறுவனின் காலில் கடித்துள்ளது.
இதில் காயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கு முன்பு இதே கிராமத்தை சேர்ந்த 4 பேரை மந்திக் குரங்கு தாக்கிய நிலையில் இது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.