நடிகர் – நடிகைகளின் சம்பளத்தை குறைக்க வேண்டும் என மதுரை வினியோகஸ்தர்கள் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தி மதுரை – இராமநாதபுரம் பிலிம் டிஸ்டிரிபியூட்டர்ஸ் அசோசியேசன் சங்கத்தின் 2024- 2026 ஆம் ஆண்டுக்காக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சங்க நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா, மதுரையில் நடைபெற்றது.
இதில் கவுரவத் தலைவராக ஜி.என்.அன்புச் செழியன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிகழ்ச்சியில் புதிய திரைப்படங்கள் வெளியாகி 6 வாரங்கள் கழித்தே அவற்றை ஓ.டி.டி-யில் வெளியிட வேண்டும், நடிகர் – நடிகைகளின் சம்பளத்தை குறைக்க வேண்டும், தமிழக அரசு திரையரங்குகளுக்கு விதித்த காம்பவுண்டிங் வரி 8 சதவீதத்தை முற்றிலும் நீக்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.