புதுச்சேரியில் கனமழை காரணமாக காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்து காணப்படுகிறது.
தமிழகம், புதுச்சேரியில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது.
இதனால் புதுச்சேரியில் காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளதோடு விலையும் சற்று உயர்ந்துள்ளது.
அந்த வகையில் கடந்த வாரம் 21 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ தக்காளி தற்போது 28 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல முட்டைகோஸ், முள்ளங்கி, பாகற்காய் ஆகிய காய்கறிகளின் விலையும் சற்று உயர்ந்துள்ளது.