மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை வாக்குச்சாவடியில் நடிகர்கள் அமீர் கான், சைஃப் அலி கான், நடிகைகள் கரீனா கபூர், ஆதித்யா ஷெட்டி உள்ளிட்டோர் வாக்களித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமீர்கான், வாக்காளர்களுக்கு பொறுப்புணர்வு உள்ளதாகவும், எனவே அனைவரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். வாக்குகளை வீணாக்க வேண்டாம் என்றும் அவர் கூறினார்.