இந்திய வங்கிகளின் நிகர லாபம் முதல் முறையாக 3 லட்சம் கோடியை தாண்டியுள்ளதற்கு பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
பொதுத்துறை வங்கிகள் 1.4 லட்சம் கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளன. இதேபோல் தனியார் வங்கிகள் 1.7 லட்சம் கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளன.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டி வந்த நிலையில், முதல் முறையாக வங்கிகள் அவற்றை பின்னுக்குத் தள்ளியுள்ளன.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், பாஜக ஆட்சிக்கு வந்தபோது, வங்கிகள் நஷ்டத்தில் இருந்ததாகவும், ஏழைகளுக்கு வங்கி சேவை கிடைக்காமல் இருந்ததாகவும் கூறினார்.
தற்போது லாபம் ஈட்டும் நிலைக்கு வங்கிகள் சென்றிருப்பது, ஏழைகளுக்கும், விவசாயிகளுக்கும், சிறு குறு தொழில் முனைவோருக்கும் கடன் பெற உதவியாக இருக்கும் என்றும் மோடி தெரிவித்துள்ளார்.