ஆந்திராவில் நடைபெற்ற ஏஷியன் சிலம்ப போட்டியில் பதக்கங்களை வென்ற வேலூர் மாணவர்களுக்கு காட்பாடி ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
விஜயவாடாவில் வேர்ல்ட் யூனியன் சிலம்பம் ஃபெடரேஷன் சார்பில் நடைபெற்ற சிலம்ப போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.
இதில் வேலூரில் உள்ள சிலம்ப பயிற்சி பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர். அவர்களுக்கு காட்பாடி ரயில் நிலையத்தில் ஆசிரியர்கள், உறவினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.