5-ம் கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், மாலை 5 மணி நிலவரப்படி 56 புள்ளி 68 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
18-வது மக்களவைத் தேர்தல் 7 கட்டமாக நடைபெறும் நிலையில்,5 கட்ட தேர்தல் நிறைவடைந்துள்ளன.5-ம் கட்ட தேர்தலில் 6 மாநிலங்கள்,2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
அதன்படி உத்தரபிரதேசத்தில் 14 தொகுதிகளிலும், மகாராஷ்டிராவில் 13 தொகுதிகளிலும், மேற்கு வங்கத்தில் 7 தொகுதிகளிலும், பீகார் மற்றும் ஒடிசாவில் தலா 5 தொகுதிகளிலும், ஜார்க்கண்டில் 3 தொகுதிகளிலும், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கில் தலா ஒரு தொகுதிக்கும் என மொத்தம் 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.
இந்நிலையில் மாலை 5 மணி நிலவரப்படி 56 புள்ளி 68 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது