நேபாள நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் பிரசண்டா வெற்றி பெற்றார்.
நேபாளத்தில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அளித்த ஆதரவை கூட்டணி கட்சியான ஜனதா சமாஜ்வாடி கட்சி கடந்த வாரம் திரும்ப பெற்றது. இதனால், ஆட்சி கவிழும் அபாயம் ஏற்பட்டது.
இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. மொத்தம் 272 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில், ஆட்சியைத் தக்கவைக்க 136 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், 157 வாக்குகளுடன் பிரதமர் பிரசண்டா தனது ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டார்.
பிரதான எதிர்க்கட்சியான நேபாள காங்கிரஸ் கட்சி நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணித்தது.