ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மாடியிலிருந்து குதித்து இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தேவிபட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெரால்ட். மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த இவர் விரக்தியில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
பின்னர் மீட்கப்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்றுவந்த ஜெரால்ட், 5-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.