வேலூரில் பேருந்து பயணிகளிடம் தொடர் நகை திருட்டில் ஈடுபட்டு வந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
வேலூரில் உள்ள புதிய மற்றும் பழைய பேருந்து நிலையங்களில் தொடர்ச்சியாக நகை திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வந்தன.
இது தொடர்பான புகார்களின் பேரில், போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
அதில் ஆந்திராவைச் சேர்ந்த பாரதி என்பவர், சக பயணிபோல் நடித்து தொடர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார், 33 சவரன் நகைகள் மீட்கப்பட்டது.